ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்திய சீனா!
09:29 AM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement
பாதுகாப்புத் துறைக்கான தனது பட்ஜெட் ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Advertisement
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் நாடு சீனா. இந்த நிலையில், சீனாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக ரூ.18.42 லட்சம் கோடி (1.6 லட்சம் கோடி யூவான்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா தனது ராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இதே அளவுக்கு தனது பாதுகாப்பு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருந்தது.