For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆதரவின்றி தவிக்கும் மாணவர்கள் - அரசு உதவ கோரிக்கை!

01:42 PM Dec 20, 2024 IST | Web Editor
ஆதரவின்றி தவிக்கும் மாணவர்கள்   அரசு உதவ கோரிக்கை
Advertisement

ஆதரவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் = கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பையா. இவரும் இவர் மனைவியும் உயிரிழந்து விட்டனர். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் மூவரும் கோவிலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் படித்து வருகின்றனர்.
முதல் மகள் 10ஆம் வகுப்பும், 2வது மகள் 9ஆம் வகுப்பும் மற்றும் 3ஆவது மகன் 7ஆம் வகுப்பும் படிக்கின்றனர். பெற்றோர் உயிரிழந்த நிலையில் மூவரையும் இவர்களின் அத்தை அரவணைத்து வருகிறார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இவர்கள் வசிக்கும் ஓட்டு வீட்டின் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. இதிலிருந்து மூன்று குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த ஓட்டு வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வேறு இடத்திற்க்கு செல்ல வழி இல்லாத குழந்தைகள் அதே வீட்டில்தான் வசித்து வருகின்றனர்.

இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து whatsapp குழு அமைத்து அதன் மூலம் நிதி திரட்டி வருகிறார். அதன் மூலம் குழந்தைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்த வருகின்றனர். வீடு கட்டிக் கொடுத்தாலும் வசதியின்றி தவித்து வரும் மாணவர்களின் சாப்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement