For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
11:33 AM Jul 12, 2025 IST | Web Editor
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிராமம், திருவேங்கடஉடையான்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். ஜஸ்வந்த் (வயது 8) த/பெ.ஸ்ரீதரன், செல்வன். மாதவன் (வயது 10) த/பெ.கனகராஜ் மற்றும் செல்வன். பாலமுருகன் (வயது 10) த/பெ.செந்தில் ஆகிய மூவரும் நேற்று (11.7.2025) மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மருதக்குடி கிராமத்தில் உள்ள ஊரணிகுளம் என்கிற பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement