முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம் : இன்று முதல் விண்ணப்பம் துவங்கியது!
முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் என்ற புதிய திட்டட்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சுதந்திர தினத்தின்போது தனது உரையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு மூலதனமாக 30 சதவீத மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசு வழங்கும். பணியில் இருக்கும்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தில் பணியாற்றியவர்களின் நலனுக்கான நம்முடைய முன்னெடுப்பு!
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் - பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!#காக்கும்_கரங்கள் pic.twitter.com/1JHRZw0DFN
— M.K.Stalin (@mkstalin) February 17, 2025
www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.