Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
05:20 PM Nov 03, 2025 IST | Web Editor
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகு உள்ளிட்ட 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 03.11.2025 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர். அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள  முதலமைச்சர்  ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும். பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
CMStalinExternal Affairs MinisterfishermenarrsetJaishankarlatestNewstnfishermenTNnews
Advertisement
Next Article