ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது திராவிட மாடல்அரசு! அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். கொலோன் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டது சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் முயற்சிகளுக்கு நல்லூக்கமாக அமைந்தது”
என்று தெரிவித்துள்ளார்.