சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமையில், நடைப்பயிற்சியின் போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் முதல்வர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு மருத்துவமனையில் இருந்தே தன் பணிகளைக் கவனித்து வந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல், சினிமா என பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்ப உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் கூடியிருந்த திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் ,வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான அலௌவல் பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.