For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.8,802 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

06:46 PM Feb 27, 2024 IST | Web Editor
ரூ 8 802 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற புதிய திட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Advertisement

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நீர்வளத் துறை, வேளாண்மை - உழவர் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உயர்கல்வித் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளிட்ட துறைகளின் சார்பில் 8,801 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, நீர்வளத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், உயர்கல்வித் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1615 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்களில் மொத்த மதிப்பு ரூ.10,417.22 கோடி ஆகும்.

Advertisement