For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்” - இபிஎஸ் குற்றச்சாட்டு!

11:48 AM Nov 29, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்”   இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் மூவரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement