Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும்"- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேச்சு!

01:46 PM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் ரங்கசாமி 2 முறை முதலமைச்சரானதற்கு அதிமுக தான்.  மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று (மார்ச்.2) வெளியிடப்பட்டது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.  இந்த நிலையில், புதுச்சேரி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதலமைச்சருமான ரங்கசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் எனவும் தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வருவார் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  தெரிவித்தார்.  இந்த நிலையில், புதுச்சேரியில் ரங்கசாமி 2 முறை முதலமைச்சரானதற்கு ஆதரவளித்தது அதிமுக தான்.  மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:

"பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதனால் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு ஆதரவளித்து வருவது திமுகவிற்கு களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .  தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து உண்மையை பேசினார்.  அது அவரது நிலைப்பாடு.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரியில் பாஜகவினர்,  தேர்தல் துண்டு பிரசுரங்களில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மலிவு விளம்பரத்தை தேடுகின்றனர்.  இதனை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட எந்த நலன்களையும் செய்து தராத பாஜக தேர்தல் நேரத்தில் செய்யும் கபட நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  பாஜகவிற்கு புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை துவக்கிய முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து தரமாட்டோம் என திட்டவட்டமாக கூறிய பாஜகவிற்கு ஆதரவாக எப்படி செயல்படுகிறார். "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
ADMKAIADMKBJPElection2024Lok Sabha Elections 2024NR CongressPuducheryRangaswamy
Advertisement
Next Article