For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் #MKStalin காணொலி வாயிலாக ஆலோசனை!

09:48 PM Sep 08, 2024 IST | Web Editor
திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர்  mkstalin  காணொலி வாயிலாக ஆலோசனை
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசணை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், கட்சியின் பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், பவளவிழாவையொட்டி திமுகவினரின் வீடுகள்-அலுவலகங்கள்-வணிக வளாகங்களில் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதனுடன் அவர் அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement