தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் #MKStalin!
தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : #WeatherUpdate | தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!…
அதன்படி, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செ. 26) இரவு டெல்லி செல்கிறார். தொடர்ந்து, நாளை மறுநாள் (செப். 27) பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கும்படி முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.