இன்று #DMK ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை!
இன்று இரவு 7:30 மணிக்கு கழக ஒருங்கிணைப்பு குழுவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். 17 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வரும் செப்டம்பர் 14-ம் தேதி அவர் நாடு திரும்புகிறார். இந்தப் பயணத்தில் இதுவரை மொத்தம் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ 400 கோடியில், சுமார் 500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்கா தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரவு 7:30 மணிக்கு கழக ஒருங்கிணைப்பு குழுவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறி உள்ளதாக கூறப்படுகிறது.