தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும், மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”அன்பு சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூகநீதி இயக்கத்தின் உந்து சக்தியாக உருவெடுத்து , மில்லியன் கணக்கான மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் தலைமையின் கீழ் பீகார் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் நிற்கும் வேளையில், சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்திற்கான விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வரலாற்றுப் பாதையைத் தொடர உங்களுக்கு வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் தைரியம் கிடைக்க வாழ்த்துகிறோம்”
என்று பதிவிட்டுள்ளார்.