For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
11:21 AM Aug 04, 2025 IST | Web Editor
தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் இந்த தொழிற்சாலைக்கு அடிக்​கல் நாட்​டி​னார். முதற்​கட்​ட​மாக ரூ.1,119.67 கோடி​யில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 2 பணிமனைகள், 2 கிடங்​கு​கள், கார் பரிசோதனை செய்​யும் இடம் உள்​ளிட்​டவை அமைக்​கப்​பட்​டுள்​ளன. முதல்​கட்ட கார் உற்​பத்​திக்​கான பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் வி.எப்​-6, வி.எப்-7 வகை கார்​கள் இங்கு உற்​பத்தி செய்​யப்​பட்​டு, விற்​பனைக்கு தயாராக உள்ளன. இந்த ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் கார் விற்​பனையை தொடங்​கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement