For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்' - பெரியார் நினைவகத்தை நாளை திறந்து வைக்கிறார்!

11:47 AM Dec 11, 2024 IST | Web Editor
 கேரளா சென்றார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்    பெரியார் நினைவகத்தை நாளை திறந்து வைக்கிறார்
Advertisement

பெரியார் நினைவகத்தின் புனரமைப்பு மற்றும் 100வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வைக்கம் சென்றார்.

Advertisement

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா சென்றார். மேலும் நாளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

Tags :
Advertisement