Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை!” - அண்ணாமலை பேட்டி!

06:46 PM Mar 12, 2024 IST | Web Editor
Advertisement

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறுகிறார், அதனை மறுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“குடியுரிமை என்பது இரண்டு தேவைகளை பூர்த்தி செய்யும். ஒன்று பிறப்பு, மற்றொன்று வழித்தோன்றல். குடியுரிமை என்பது கல்லில் எழுதப்பட்ட விதிகள் கிடையாது. நாம் அனைவரும் பிறக்கும் பொழுது குடியுரிமை சட்டத்தை மாற்றியுள்ளார்கள். ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள் ஒன்றாக வாழ 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தோம். அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இயற்கையாகவே அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்.

தற்போது ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் போதும். அவர்கள் இந்தியாவின் குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 - பிறகு 1416 பேருக்கு குடியுரிமை கொடுத்துள்ளோம். இதற்கு முன்பாக 13 ஆண்டுகள் காத்திருந்தவர்கள் தற்போது ஐந்து ஆண்டுகள் போதும் குடியுரிமை பெற. காங்கிரஸ் ஆட்சியில் கூட அகதிகளாக வந்த நபர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை கொடுப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடிவம் கொடுத்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் இது என்னவென்றே தெரியாமல் ஏதேதோ பேசுகிறார்கள். பிறப்பு மற்றும் வழித்தோன்றல் மூலமாக இந்தியாவில் குடியுரிமை தீர்மானிக்கபடுகிறது. இஸ்லாமியரின் குடியுரிமையை பறிப்பதற்காக இந்த சட்டம் இல்லை. ஒரு சதவீதம் கூட இந்த குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இல்லை. 1950 முதல் 1987 வரை இந்தியாவில் யார் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு நேரடி குடியுரிமை.

மதத்தின் காரணமாக யார் யாருக்கெல்லாம் சலுகைகள் வழங்க மறுக்கப்பட்டதோ, அவர்கள் எல்லாம் நம் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்துவிட்டனர். இந்தியாவுக்குள் யாராவது தப்பி வந்தால் நாம் அவர்களை திருப்பி அனுப்ப மாட்டோம். ஆனால் அவர்களை அகதிகளாக வைத்திருப்போம். அகதிகளாக இந்தியாவுக்குள் வந்திருந்தால் 16 வருடம் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

அகதிகள் 22 இந்திய மொழிகளில் ஒரு மொழி பேச வேண்டும். சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார். தேசிய நீரோட்டத்துடன் பயணிக்க வேண்டும் என்று சரத்குமார் பாஜகவில் இணைந்துள்ளார்கள். தற்போது பாஜக குடும்பம் என்பது பெரிய குடும்பமாக மாறி உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து பொய் பேசி குறை சொல்வதை விட, எந்த இடத்தில் குறை இருக்கிறது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். குடியுரிமை சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

குடியுரிமை சட்டத்தை தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவருக்கு மறுக்க எந்த அதிகாரமும் கிடையாது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்னிடம் யாரும் ஆலோசிக்கவில்லை. நான் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் யாரும் சொல்லவில்லை. பாமக, தேமுதிக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழு இருக்கிறது. அக்குழுவினர் விரைவில் கூட்டணிக் குறித்து தெரிவிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
#CAAAnnamalaiBJPCAA2019CitizenshipAmendmentActMK Stalin
Advertisement
Next Article