For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

12:28 PM Aug 12, 2024 IST | Web Editor
புதுக்கோட்டை  திருவண்ணாமலை  நாமக்கல்  காரைக்குடி மாநகராட்சிகள்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Advertisement

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதையும் படியுங்கள் : ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 10 பொலிரோ வாகனம் மற்றும் 58 கழிவு நீர் அகற்றும் வாகனங்களையும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 144 நபர்கள் மற்றும் கருணை அடிப்படையில் 27 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Tags :
Advertisement