For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலிவுட் படத்தை இயக்கும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம்! வெளியான அப்டேட்!

02:03 PM Jul 17, 2024 IST | Web Editor
பாலிவுட் படத்தை இயக்கும்  மஞ்சும்மல் பாய்ஸ்  இயக்குநர் சிதம்பரம்   வெளியான அப்டேட்
Advertisement

மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இயக்குநர் சிதம்பரம் ‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக  அறிமுகமானர். இந்த திரைப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.

இதையும் படியுங்கள் : தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 50-75% இடஒதுக்கீடு: மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். தொடர்ந்து, இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் இயக்கவுள்ள இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில், நடிகர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement