#ChessOlympiad | 10வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி !
செஸ் ஒலிம்பியாட்டின் 10வது சுற்றில் இந்தியா வெற்றி பெற்றது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 10வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இறுதியில் இந்தியா 2.5 - 1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கியது. அதேபோல், இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றுள்ளது. 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.