செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய #PMModi
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்றது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : #TVK மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! நிபந்தனைகள் என்னென்ன?
இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இளம் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகாய்சி இருவரும் செஸ் விளையாட அதை உற்சாகமாக கண்டுகளித்தார் பிரதமர் மோடி. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.