For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ChennaiRains | சென்னையில் 6 விமானங்கள் ரத்து!

12:49 PM Oct 16, 2024 IST | Web Editor
 chennairains   சென்னையில் 6 விமானங்கள் ரத்து
Advertisement

கனமழை எச்சரிக்கை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் இருந்து புதன்கிழமை புறப்படவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு புதன்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், புதன்கிழமை இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது.

இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்ததால், சாலைப் போக்குவரத்து சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சீரானது. சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று (அக். 16) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததை அடுத்து தொடர் மழை காரணமாக போதிய பயணிகள் இல்லாததால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை புறப்படவிருந்த மதுரை, சேலம், ஷீரடி, மதுரை-சென்னை, ஷீரடி-சென்னை, சேலம்-சென்னை செல்லக் கூடிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - மதுரை (காலை 6.55), சென்னை - சேலம் இண்டிகோ (காலை 10.35), சென்னை - ஷீரடி ஸ்பைஸ் ஜெட் (பிற்பகல் 2.40), மதுரை - சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 10), ஷீரடி - சென்னை ஸ்பைஸ் ஜெட் (பிற்பகல் 1.40), சேலம் - சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் (மாலை 6) செல்லக் கூடிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தெரிந்த பின்னர் தங்களது பயணத்தை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement