#ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே பச்சை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, பின்னர் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும்.
இதையும் படியுங்கள் : #TrailerUpdate | ‘வாழை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!
இருப்பினும், விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரையிலும், புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் இயக்கப்படும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.