#Chennai | நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண் | விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் அதிகாலையில் வீடு புகுந்து மர்ம நபர்களால் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளாது.
சென்னை வளசரவாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 60 லட்சம் மதிப்புள்ள 25 சவரன் நகை கொள்ளை அடைத்து சென்றதாக கூறப்பட்டது. வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
சென்னை வளசரவாக்கம் தர்மராஜன் நகர், விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார் மூதாட்டி சாந்தி (60) இவர் தனது மருமகள், மகன், பெண்ணுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் திடீரென சாந்தியை மயக்க மருந்து கொடுத்து கை, கால்களை கட்டி போட்டு அவர் வீட்டிலிருந்த சுமார் 25 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து புகார் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சி மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். மூதாட்டி சாந்தியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் சாந்தியே தனக்குத் தானே தூக்கம் மாத்திரை எடுத்துக் கொண்டு ஸ்பிரே முகத்தில் அடித்துக் கொண்டு மயங்கிய போல் நடித்து செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. வீட்டிலிருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூட்டுறவு வங்கியிலும், மற்றும் அடுக்கு கடைகளிலும் அடமானம் வைத்தது தெரிய வந்து விடுமோ என்ற அச்சத்தில் நாடகத்தை நடத்திருப்பது விசாரணை தெரியவந்துள்ளது.