For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை நிதின் சாய் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண், தேடுதல் வேட்டை தீவிரம்!

குற்றவாளி ஆரோனை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
03:13 PM Jul 30, 2025 IST | Web Editor
குற்றவாளி ஆரோனை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
சென்னை நிதின் சாய் கொலை வழக்கு  மேலும் ஒருவர் சரண்  தேடுதல் வேட்டை தீவிரம்
Advertisement

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன், திருமங்கலம் அருகே நிதின் சாய் என்ற கல்லூரி மாணவர் கார் மோதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நிதின் சாய் வேண்டுமென்றே கார் ஏற்றிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய பிரணவ், சுமன், மற்றும் சந்துரு ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரித்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தின்போது காரை ஓட்டிச் சென்ற முக்கிய குற்றவாளி ஆரோன் என்பது தெரியவந்தது. போலீசார் ஆரோனை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆரோனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிதின் சாய்க்கும், இந்தக் கும்பலுக்கும் இடையே இருந்த முன்விரோதம் என்ன? இந்தக் கொலைக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்த தகவல்கள் ஆரோனின் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரான எட்வின் என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. எட்வின் பிடிபட்டால் இந்தக் கொலை வழக்கின் அனைத்து மர்ம முடிச்சுகளும் அவிழும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் நிதின் சாய் கொலை வழக்கு, சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement