பெருநகர #Chennai மாநகராட்சி மாமன்றக் கூட்டம் | கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!
செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முக்கியமான தீர்மானங்கள் :
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.120 வரை நிர்ணயம் செய்யவும் திட்டம்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவை முறைப்படி தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார்டு 37 வியாசர்பாடி கால்பந்து திடல்,
வார்டு 58 நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67 திரு விக நகர் கால்பந்து மைதானம், வார்டு 77 கே.பி.பார்க் கால்பந்து மைதானம் உள்ளிட்ட 9 இடங்களை ஒப்படைக்க உள்ளது.
இதையும் படியுங்கள் : #Israel தாக்குதல் | காஸாவில் 43,000-ஐ கடந்த உயிரிழப்பு!
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே டென்னிஸ் திடல், ஷெட்டில் பேட்மிட்டன் , ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் தனியாரிடம் பராமரிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.