For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சான்ஸே இல்ல.. நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல” -பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்!...

08:40 AM Oct 25, 2023 IST | Web Editor
“சான்ஸே இல்ல   நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல”  பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்
Advertisement

பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

Advertisement

செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  NUMBEO என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்/ஆசிரியரான திரு. லேடன் அடமோவிக் என்பவர் கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராகவும் போஸ்னியா & ஹெர்சகோவினா, பஞ்ஜா லுகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பயிற்றுநராகவும் பணிபுரிந்தவர் ஆவார். Numbeo என்ற இணையதள நிறுவனம் BBC, Time The Week, The Telegraph, The Age, The Sydney Morning Herald, China Daily, The Washington Post, USA Today மற்றும் பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி நிறுவனம், உலகின் முக்கிய நகரங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும்,  உலகளவில் 127வது இடத்தையும் பெற்றுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை தொடர்பாகவும், இதர காரணங்களின் அடிப்படையிலும் மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதர மெட்ரோ நகரங்களான மும்பை (161), கொல்கத்தா (174) மற்றும் புது டில்லி (263) ஆகியவை சென்னைக்கு அடுத்து இடம்பெற்றுள்ளன.

மேலும், இவ்வாண்டின் தொடக்கத்தில் “அவ்தார்” என்ற நிறுவனம் வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களின் பங்கேற்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், பத்துலட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை மாநகரம் பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல், சென்னை மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது.

Advertisement