சென்னையில் தொடர் கனமழை - 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
சென்னையில் கனமழை பெய்துவருவதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : ‘மிக்ஜாம்’ புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!
இதனை தொடர்ந்து, மைசூரு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி, பெங்களூர் ஏசி டபுள் டக்கர். பெங்களூரு பிருந்தாவன், திருப்பதி சப்தகிரி ஆகிய 6 விரைவு ரயில்களும் இன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.