Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை | மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னையில் மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
09:26 AM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை திரு.வி.க. நகர்  2வது தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது 72). இவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மனைவி ராஜேஸ் வரி (வயது 55). இவர்களுக்கு தினகரன் வயது 23 என்ற மகன் உள்ளார். சேகரன் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக  வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சேகரன் மற்றும் அவரது மகன் தினகரன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி இரவு 1 மணி அளவில் குடிபோதையில் வீட்டில் பிரச்னை செய்த சேகரனை அவரது மகன் தினகரன் கண்டித்தார். அப்போது தினகரனும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய் தகறாறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த தினகரன் வீட்டிலிருந்த பெல்ட்டை எடுத்து சேகரனை வேகமாக தாக்கினார். இதில் சேகரன் முகத்தில் பலத்த காயமடைந்தது.  இதனையடுத்து சேகரன் உடடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சேகரனின் மனைவி ராஜேஸ்வரி திரு. வி.க. நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தினகரனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேகரன் இன்று (மார்ச் 16) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய திரு. வி.க நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
ArrestChennaihospitalnews7 tamilNews7 Tamil UpdatesPolice
Advertisement
Next Article