Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் நடைபெற்ற என்கவுண்ட்டர்கள் பட்டியல் - மரண பீதியில் ஓடி ஒளியும் ரவுடிகள்!

04:16 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் தற்போது வரை நடைபெற்ற முக்கிய என்கவுண்ட்டர்கள் பற்றி இங்கு காணலாம்.

Advertisement

ரவுடிகள் அராஜகத்தால் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பற்றி அடிக்கடி கேள்வி எழும். அப்போதெல்லாம் போலீசால் என்கவுண்ட்டர் நடத்தப்படுவதாக காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். அந்த வகையில் நாட்டையே அதிர வைத்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை பல இடங்களில் என்கவுண்ட்டர்கள் நடைபெற்றாலும், சென்னையில் பல பயங்கரகொலை குற்றவாளிகளும், வங்கி கொள்ளையர்களும் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுவரை சென்னையில் நடைபெற்ற என்கவுண்ட்டர் பட்டியலை தற்போது பார்க்கலாம்.  சென்னையில் முதல் என்கவுண்டர் ஜூலை 30ஆம் தேதி 1996-ம் ஆண்டு நடைபெற்றது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே நடந்த என்கவுன்ட்டரில் அப்போதைய முக்கிய தாதாவான ஆசைத்தம்பி, தனது கூட்டாளிகளுடன் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு வெங்கடேச பண்ணையார் என்கவுண்ட்டரில்
கொல்லப்பட்டார். அதே ஆண்டு திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் தாதா வீரமணி
கடற்கரையில் வெள்ளைத்துரை என்ற எஸ்.ஐ. மூலம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பங்க் குமார் என்பவர் கூடுதல் ஆணையர்
ஜாங்கிட் தலைமையிலான போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி மற்றொரு முக்கிய தாதாவான வெள்ளை ரவியும் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னையின் பிரபல ரவுடியான பாபா சுரேஷ்
என்பவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்தார். பின்னர் காசிமேட்டில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயல வெடிகுண்டை எடுத்து வீச முயன்றார். இந்த சம்பவத்தில் பாபா சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்ததாக மிகப்பெரிய என்கவுண்ட்டர் என்று பார்க்கும் போது, பல வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களை வேளச்சேரியில் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பின்னர் ஒரு சில என்கவுண்ட்டர் ஆங்காங்கே நடைபெற்றாலும், இன்று காலை
திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டது ரவுடிகள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் காரணமாக ரவுடிகள்
தலைமறைவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
ChennaiEncountersPoliceRowdies
Advertisement
Next Article