Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கால்பந்து திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றது #Chennai மாநகராட்சி!

03:28 PM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

மாநகராட்சிக்கு உட்பட்ட கால்பந்து திடல்களை தனியாா்மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (அக்.29) நடைபெற்றது. அதில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.120 வரை நிர்ணயம் செய்யவும் திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவை முறைப்படி தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார்டு 37 வியாசர்பாடி கால்பந்து திடல்,
வார்டு 58 நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67 திரு விக நகர் கால்பந்து மைதானம், வார்டு 77 கே.பி.பார்க் கால்பந்து மைதானம் உள்ளிட்ட 9 இடங்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திடல்களை தனியார்மயமாக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரே நாளில், அதனை திரும்பப் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதனுடன், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விளையாட்டு திடல்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பராமரிப்பு செலவை மாநகராட்சியே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiChennai corporationfootballnews7 tamil
Advertisement
Next Article