சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் - 200 கவுன்சிலர்களில் வெறும் 87 பேர் பங்கேற்பு!
சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசினார்கள். இறுதியில் மேயர் பிரியா பதிலுரை நிகழ்த்தினார். கூட்டத்தின் இறுதியில் 2025-26-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்றைய மன்ற கூட்டம் தொடங்கிய போது, 200 கவுன்சிலர்களில் வெறும் 87 பேர்
மட்டுமே பங்கேற்றனர். பாதி இருக்கைகள் காலியாக இருந்தது. 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டாயம் அனைத்து கவுன்சிலர்களும் மன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இன்றைய மன்ற கூட்டத்தில் மொத்தமுள்ள 200 பேரில் 80 பேர் மட்டுமே
பங்கேற்றனர். இதில் 102 பேர் உள்ள பெண் கவுன்சிலர்களில் 60 பேர் மட்டுமே
கலந்து கொண்டனர். இதில் 4 பேர் ஏற்கனவே காலமாகிவிட்டனர். ஒரு பெண்
கர்ப்பிணியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.