For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை புத்தகக் காட்சி டிச.27-ல் துவக்கம் - பபாசி அறிவிப்பு!

03:56 PM Dec 09, 2024 IST | Web Editor
சென்னை புத்தகக் காட்சி டிச 27 ல் துவக்கம்   பபாசி அறிவிப்பு
Advertisement

சென்னையில் புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் ஜன.12 வரை நடைபெறும் என பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

48வது சென்னைப் புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் நவ.27ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இது ஜன.12ஆம் தேதி வரை நடைபெறும். இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கின்றனர்.

இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்குகிறார். புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது.

பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.

உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்ற நீதிபதி) விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.

இதுதொடர்பாக பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

“கடந்த ஆண்டு 20 லட்சம் வாசகர்கள் வந்தார்கள். இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடைபெற்றது. வாசகர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.10. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 லட்சம் விலையில்லா டிக்கெட் வழங்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கார்களும், 50,000 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாக புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது” என தெரிவித்தார்.

Advertisement