சென்னை புத்தகக் கண்காட்சி | முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!
09:46 AM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக்காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பிரமாண்டமாக புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்வார்கள் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் கடந்த 46 ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் இன்று 47-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் செய்ய மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்க வைக்கிறார். இன்று தொடங்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து பதிப்பாக புத்தகங்களும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும்
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் , வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,