For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பரிசோதனை முடிவுகள் வந்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

02:02 PM Nov 17, 2023 IST | Web Editor
 பரிசோதனை முடிவுகள் வந்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை    அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. என்ன பாதிப்பு என்பது குறித்த பரிசோதனை முடிவு வந்தபின் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டினை வெளியிட்டு, புதிய வலைதளத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரித்ததாவது..

" இந்திய அளவில் மாநில அரசு நடத்துகின்றன சர்வதேச அளவிலான மாநாடு இதுவே முதல் முறை.  கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வருகின்ற ஜனவரி 19தேதி முதல் 21 தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  இம்மாநாட்டில் 23 மருத்துவ சிறப்பு பிரிவு சார்ந்த மருத்துவர்கள் கலந்துகொள்கின்றனர்.

தேசிய அளவிலும் சிறந்த மருத்துவர் நிபுணர்களும் கலந்து கொள்கின்றனர்.  10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 இளங்கலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்
மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதன் விளைவாகவே தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அதை நிறுத்தி வைத்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் பிரச்சனைகளே ஏற்பட்டுள்ளன.
இன்று சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன பாதிப்பு என்பது குறித்த பரிசோதனை முடிவுகள் வந்தபின், அதற்கான சிகிச்சை வழங்கப்படும்.

தமிழ்நாடு மருத்துவ துறையில் உள்ள 5000 காலி பணியிடங்கள் 1 மாதத்தில் எம்.ஆர்.பி
மூலம் விரைவில் மருத்துவர்கள் , செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். நேற்று ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்து பேரவை
செயலர் அறிவிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

Tags :
Advertisement