For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நாளை துணை முதலமைச்சர் அறிவிப்பு வரவிருக்கிறது.. " - மூத்த பத்திரிக்கையாளர் #SPLakshmanan பதிவு!

01:59 PM Sep 28, 2024 IST | Web Editor
 நாளை துணை முதலமைச்சர் அறிவிப்பு வரவிருக்கிறது       மூத்த பத்திரிக்கையாளர்  splakshmanan பதிவு
Advertisement

நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்தே வந்தார். அதேநேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையே பலமுறை திமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர்பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஏமாற்றம் இருக்காது... மாற்றம் இருக்கும்" என பதிலளித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/splakshmanan76/status/1839894711202718109

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்? இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன. சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். “அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.

வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஆனாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்."

இவ்வாறு மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement