30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் - மைக்ரோசாப்ட் அதிரடி!
30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் 'கோபைலட்' ஏஐ பயன்படுத்துவதற்கான பட்டனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை கீ போர்டில் கடைசியாக புகுத்தியது. பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, தனது கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இது சாட்பாட் உட்பட ஏஐ தொடர்பான அனைத்து பயன்பாடுகளுக்கும் திறப்பாக அமையும். இந்த வசதி விண்டோஸ் 11 பதிப்புகளில் கிடைக்கும். மைக்ரோசாப்டின் ஹார்ட்வேர் துணை நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் தங்களது கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்துகொள்வது அவசியம் என கூறப்படுகிறது. புதிதாக கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய புதிய தலைமுறை வருகைக்காக சற்று காத்திருப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.