For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னை சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்!” - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு...!

08:40 PM Feb 07, 2024 IST | Web Editor
“சென்னை சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம் ”   தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைநடைபெற உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த போட்டிக்கான கர்நாடகா அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் ; உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த ரஞ்சி கோப்பை போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பார்வையாளர்கள் C,D,E ஸ்டாண்ட்ஸ் இருக்கைகளில் அமர்ந்து இலவசமாக போட்டியை காணலாம் என தெரிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள 4வது நுழைவாயில் வழியாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணியை பொறுத்தவரை, மயங்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், சமர்த் ஆர், மணீஷ் பாண்டே, ஷரத் ஸ்ரீனிவாஸ், அனீஷ் கே.வி., வைஷாக் விஜயகுமார், வாசுகி கவுசிக், சஷிகுமார் கே, சுஜய் சதேரி, வித்வத் கவரப்பா, வெங்கடேஷ் எம், கிஷன் எஸ் பெதரே, ரோஹித் குமார் ஏசி, ஹர்திக் ராஜ். ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Tags :
Advertisement