அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே நேற்று தமிழ்நாட்டின் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும், வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா - 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையானது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.