For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம் தகவல்!

08:45 AM Jun 10, 2024 IST | Web Editor
தமிழகத்தில் இடி  மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (10.6.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement