ஜனவரி 10 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!...
06:48 AM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement
தமிழகம், புதுவையில் ஜனவரி 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. டிசம்பர் தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயலாலும், தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையாலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன.
அதன்பின்னர் அதை தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பல பகுதிகளிலும் மிதமான அளவிலேயே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம், புதுவையில் ஜனவரி 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.