For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

07:31 AM Oct 13, 2024 IST | Web Editor
 rainalert   22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு   சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ன்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக உருவாகும் வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வானிலை மையம் அறிவித்ததன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலை, இன்று வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த சூழலில், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுகின்றன. அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சிகள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, நாளை இங்கு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவக்காற்று குறைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த மண்டலத்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை அடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை நிகழ வாய்ப்பு உள்ளது. இது 15ம் தேதி வரை நீடிக்கும்.

Advertisement