காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில், சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில்,
காலை 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.