16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழ் நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
08:29 AM Nov 26, 2025 IST | Web Editor
Advertisement
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
அதன் படி அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், கன்னியா குமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.