Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!

12:16 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜூலை 15) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது : 

"மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 15, 16 ஆம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள் : World Championship of Legends 2024 – பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 16 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது"

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
7 districtsChennai Meteorological CenterCoimbatoreDharmapuriErodeHeavy rainKrishnagiriNilgirisSalemtamil nadutirupattur
Advertisement
Next Article