For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு: வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

01:37 PM Mar 26, 2024 IST | Web Editor
வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு  வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
Advertisement

தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில், ”மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அச்சமயத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் வாக்களிக்க வருபவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. 

அதனடிப்படையில் வாக்குசாவடிகளில் தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகள் கீழ் தளத்தில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள நிழற்குடைகள் ஏற்படுத்த வேண்டும். முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அமரும் வகையில் நாற்காலி வசதிகள் ஏற்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை தனது சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Tags :
Advertisement