தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு!
03:03 PM Mar 05, 2024 IST
|
Web Editor
மார்ச் 5 முதல் 11 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம்.
Advertisement
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
கோடைகாலம் என்றாலே வெயில் கொளுத்தும். இந்நிலையில் மார்ச் மாதம் சராசரியை விட அதிக வெப்பநிலை காணப்படும் என கூறப்படுகிறது. மேலும் இம்மாதம் பிற்பகுதியில் வெப்பநிலை வரம்புகளைவிட உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
Next Article