“புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” - #IMD அறிவிப்பு!
புதுச்சேரிக்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு அருகில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு தெற்கே 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 40 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 90 கி.மீ தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையை கடக்க உள்ளது. புயலின் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.