For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி | தென்னாப்ரிக்காவை வீழ்த்தி பைனலில் இந்தியாவை எதிர்கொள்ளும் நியூஸி!

தென்னாப்ரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
10:34 PM Mar 05, 2025 IST | Web Editor
சாம்பியன்ஸ் டிராபி   தென்னாப்ரிக்காவை வீழ்த்தி பைனலில் இந்தியாவை எதிர்கொள்ளும் நியூஸி
Advertisement

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரைஇறுதி போட்டி நியூஸிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.

Advertisement

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதலே ரன்களை சேர்க்க தொடங்கினர். நியூஸி. அணி 43ரன்கள் எடுத்த நிலையில் வில் யங் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரச்சினும், கேன் வில்லியம்சனும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.  ரவீந்திரா 108ரன்களும், கேன் வில்லியம்ஸன் 102 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய  வீரர்கள் தங்களது பங்கிற்கு சில ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த டேரில் மிட்சலும், பிலிப்ஸும்  நிதானமாக விளையாடி தங்களது பங்கிற்கு தலா 49ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் 50ஓவர்களின் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 362 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து தென்னாப்ரிக்க 363 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. அணிக்காக கேப்டன் டெம்பா பவுமா 56 ரன்கள் மற்றும்  ரஸ்ஸி வான் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். கடைசி வரை களத்தில் நின்று போராடிய டேவிட் மில்லர்  சதம் அடித்தார். இருப்பினும் தென்னாப்ரிக்க அணி 50 ஓவர் முடிவில் 312 ரன்கள் அடித்து நியூஸிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.

இதில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டெம்பா பவுமா, வாண்டர் டஸ்ஸன் மற்றும் க்ளாசன் என 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தியது அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள பைனலில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Advertisement