மத்திய அரசு வரிப்பகிர்வு - தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!
வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, மாநிலங்களில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிக்கும் விதமாக 1,42,122 கோடி ரூபாயை விடுவித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,797 கோடியும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 25,495 கோடி ரூபாயும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான மொத்த நிதியாக ரூ. 1, 42,122 கோடி வரிப்பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ள நிதிப் பகிர்வாவது:
👉 Union Government releases another additional installment of #TaxDevolution of Rs. 1,42,122 crore to strengthen hands of State Governments for financing various social welfare measures and infrastructure development schemes
👉 With this release, States have received three… pic.twitter.com/leONMbn34Y
— Ministry of Finance (@FinMinIndia) February 29, 2024
குறிப்பிடத்தகுந்த சில மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிப்பகிர்வு விவரம்:
- உத்தரப்பிரதேசம் - ரூ.25,495 கோடி
- தமிழ்நாடு - 5797 கோடி
- ஆந்திர மாநிலம் - ரூ.5,752 கோடி
- அருணாச்சல பிரதேசம் - ரூ.2,497 கோடி
- பீகார் - ரூ.14,295 கோடி
- மத்திய பிரதேசம் - ரூ.11,157 கோடி
- மகாராஷ்டிரா - ரூ.8,978 கோடி
- ஒடிஷா - ரூ.6,435 கோடி
- ராஜஸ்தான் - ரூ.8,564 கோடி
- மேற்கு வங்கம் - ரூ.10,692 கோடி
- சிக்கிம் - ரூ.551 கோடி